திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : கோயில்
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நாடி நாரணன் நான்முகன் என்றிவர்
தேடியும் திரிந்தும் காண வல்லரோ?
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே. 5.1.10
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : kOyil
thirukkuRunthokai
Fifth thirumuRai
thirucciRRambalam
n^ADi n^AraNan n^Anmukan enRivar
thEDiyum thirin^thum kANa vallarO?
mADa mALigai cUz thillai ambalaththu
ADi pAtham en n^enycuL irukkavE 5.1.10
thirucciRRambalam
Meaning of Thevaram
Can the nArAyaNa and four faced (brahma) see
searching and wandering,
while the Feet of the Dancer at the common hall
of thillai surrounded by pinnacled houses,
is in my heart?!
பொருளுரை
மாட மாளிகைகள் சூழ்ந்த தில்லை அம்பலத்துள்
ஆடுகின்றவன் திருப்பாதம் என் நெஞ்சில் இருக்கும் பொழுது,
நாராயணன், நான்முகப் பிரமன் என்ற இவர்கள்
தேடித் திரிந்தாலும் அவர்களால் காண இயலுமோ?
Notes
1. ஒ. கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி - திருவாசகம்
பிரானவனை நோக்கும் பெருனெறியே பேணிப்
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க்கு எளிது. - காரைக்கால் அம்மையார்
.... அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே - திருநாவுக்கரசர்.