நம்பியாரூரர் அருளிய திருப்பாட்டு தலம் : திருவஞ்சைக்களம் பண் : இந்தளம் ஏழாம் திருமுறை திருச்சிற்றம்பலம் சிந்தித்தெழுவார்க்கு நெல்லிக்கனியே சிறியார் பெரியார் மனத்தேறலுற்றால் முந்தித் தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா சந்தித் தடமால் வரைபோல் திரைகள் தணியாது இடறும் கடலங்கரைமேல் அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால் அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே. திருச்சிற்றம்பலம் sundarar aruLiya thevaram thalam : thiruvanjaikkaLam paN : indhaLam Seventh thirumuRai thirucciRRambalam cin^thiththezuvArkku n^ellikaniyE ciRiyAr periyAr manaththERaluRRAl mun^thith thozuvAr iRavAr piRavAr munikaL muniyE amararkku amarA can^thith thaDamAl varaipOl thiraikaL thAniyAthu iDaRum kaDalaN^karaimEl an^thith thalaic cekkar vAnE oththiyAl aNiyAr pozil anycaikkaLaththappanE. thirucciRRambalam
Oh the nelli fruit for those who keep thinking! Be it an ordinary or honorable - those who are convinced and worship coming forward, they would not die or be born! Oh the muni of the munis! Oh the Immortal for the immortals! You resemble the evening reddish sky - oh the Father at the thiruvanycaikkaLam of embellished gardens on the seashore where the large dark mountain like waves incessantly hit! Notes: 1. The worldly status or honor of one does not matter in spirituality. The only thing that matters is conviction to worship Lord shiva. 2. thaDam - large; mAl varai - dark mount; thirai - wave; cekkar - red.