திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருப்புகலூர்
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
புற்றில் வாழும் அரவம் அரையார்த்தவன் மேவும் புகலூரைக்
கற்று நல்லவர் காழியுள் ஞான சம்பந்தன் தமிழ் மாலை
பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து
குற்றமின்றிக் குறைபாடொழியாப் புகழோங்கிப் பொலிவாரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnasambandhar aruLiya thEvAram
thalam : thiruppukalUr
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
puRRil vazum aravam araiyArththavan mEvum pukalUraik
kaRRu n^allavar kAziyuL nyAna camban^than thamiz mAlai
paRRi enRum icai pADiya mAn^thar paraman aDi cErn^thu
kuRRaminRik kuRaipADoziyAp pukazON^gip polivArE.
thirucciRRambalam
Translation of song:
The thamiz garland of thirunyanacambandhar of cIrkAzi of
learned good people on the thiruppugalUr resided by the
One Who wound the anthill living snake to the waist.
Those people who musically sang holding on to it (padhikam)
they would reach the foot of the Supreme and would be
glorious, free from blames, high in flawless fame!
Notes: