திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருஅன்பிலாலந்துறை
பண் : தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அரவார் புனல் அன்பிலாலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவார் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவாகுவர் வானிடை வீடு எளிதாமே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruanbilAlandhurai
paN : thakkarAgam
First thirumuRai
thirucciRRambalam
aravAr punal anbilAlan^thuRai than mEl
karavAthavar kAziyuL nyAnacamban^than
paravAr thamiz paththu icai pADa vallAr pOy
viravAguvar vaniDai vIDu eLithAmE.
thirucciRRambalam
Meaning of song:
On the thiruvanbilAlanthuRai of roaring water,
thirunyAnacambandhar of cIrkazi of non-disguising people
sung hailing ten songs, one who is able to musically sing
they would move in the sky, liberation is easy for them.
Notes:
1. aravAr - aravam Ar - roaring.