திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருமாந்துறை
பண் நட்டராகம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்தி செண்பகம் ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுன்னை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான் இமையோர் தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.
திருச்சிற்றம்பலம்
thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam thirumAn^thuRai
paN n^aTTarAgam
iraNDAm thirumuRai
thiruchchiRRambalam
cempon Ar tharu vEN^gaiyum nyAzaluny cerun^thi ceNpakam Anaik
kombum Aramum mAdhavi curapunnai kurun^thalar paran^thun^thi
ampon n^Er varu kAviri vaDakarai mAn^thuRai uRaikinRa
empirAn imaiyOr thozu paiN^kazal Eththuthal ceyvOmE.
thiruchchiRRambalam
Meaning:
Pure gold embedded kino (vEN^gai), perfume shrubs (nyAzal,
cerun^thi, ceNpagam), ivories, pearls, flowers of mAdhavi,
curapunnai, kurun^tham strewn across, kAviri comes as if
it is made of beautiful gold ! On its northern bank, in the
mAn^thuRai, our Lord, Who resides, His tender Feet, saluted
by the residents of himAyalam (divines), we will hail !
Notes:
1. The beauty of kAviri, the life line of chOza land,
when brings on its current the varieties of flowers and
shrubs, should have been a wonderful sight. The great
young one, who rejoices the creation of God, enjoys
this offering of nature to God of thirumAn^thuRai.