திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : பொது
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
பஞ்சாக்கரத் திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
மந்திர நான்மறையாகி வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே. 3.22.2
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : pothu
paN : gAndhAra panycamam
Third thirumuRai
panycAkkarath thiruppathikam
thirucciRRambalam
man^dhira n^AnamaRaiyAgi vAnavar
cin^thaiyuL n^inRu avar thammai ALvana
cen^thazal Ombiya cemmai vEdhiyarkku
an^thiyuL man^thiram anycezuththumE. 3.22.2
thirucciRRambalam
Meaning of Thevaram
Being the mantra of the four vedas,
residing in the conscience of the celestials
ruling them, the mantra in the twilight
for the vedins of perfection who grow the
red fire is the Five Syllable mantra.
பொருளுரை
நான்மறைகளின் மந்திரமாக இருந்துகொண்டு,
வானவர்களின் சிந்தையில் நிலைபெற்று
அவர்களை வழி நடத்துவதும்,
செந்தீ வளர்க்கின்ற திருத்தம் நிறைந்த வேதியர்களுக்கு
அந்திப்பொழுதின் கண் போற்றத்தகும் மந்திரமாவதும்
திருவைந்தெழுத்து மந்திரமேயாகும்.
Notes
1. சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமும்,
பவமதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானமும்,
உவமையிலாக் கலை ஞானமும், உணர்வரிய மெய்ஞானமும்
ஓதாதே உணர்ந்த திருஞானசம்பந்தர்க்கு உபநயனம்
செய்வித்த பொழுது, ஞானக்குழந்தையார் அங்கிருந்த
அந்தணர்களுக்குத் திருமறையின் கண் இருந்த
ஐயப்பாடுகளை நீக்கி, திருநான்மறைகளின் சாரமாக
அமைவது திருவைந்தெழுத்து மந்திரம் என்பதை இத்திருப்பதிகம்
மூலம் உணர்த்தியருளினார்.
2. அந்தியுள் மந்திரம் - காயத்திரி மந்திரம் இறைவர் தம்
சிந்தனையைக் கோரும் விதமாகவும், திருவைந்தெழுத்து
மந்திரம் அதன் பயனாக அமைவதையும் காணலாம்.
3. திருவைந்தெழுத்து மந்திரம் பற்றிய விவரங்களுக்கு
/mantras/holy-five-syllables-panchakshara-mantra
4. ஓம்புதல் - வளர்த்தல்; அந்தி - இரவு பகல் கூடும்
நேரங்கள் (இனத்தால் நண்பகலையும் உணர்த்திற்று.)