திருஞான சம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மரவஞ் சிலை தரளம் மிகு மணியுந்து வெள்ளருவி
அரவஞ் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவஞ் சடை உலவும் புனல் உடனாவதும் ஓரார்
குரவங் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvaNNAmalai
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
mara any cilai tharaLam miku maNiyun^thu veLLaruvi
aravam ceya muravam paDum aNNAmalai aNNal
uravam caDai ulavum punal uDanAvathum OrAr
kuravam kamaz n^aRu men kuzal umai pulguthal guNamE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The Ancient of thiruvaNNAmalai, where the white water fall
over the tree grown rocks pushing the pearls and many gems
roar like the beating drums, does not recognize the snake
getting into the river in the twined hair. Is it fair to
embrace the uma of kurA fragrant nice soft hair?
பொருளுரை
மரங்கள் நிறைந்த பாறைகள் மீதிருந்து, முத்துக்களையும் பல
மணிகளையும் உந்தி வருவதான வெள்ளருவி பறையின் முழக்கம்
போலச் சத்தம் செய்யும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணலார்,
தம் சடைமுடியில் உள்ள பாம்பு கங்கையாற்றின் அருகே
(அதனை அச்சுறுத்துமாறு) இருப்பதையும் நினைக்கவில்லை.
குரவம் கமழ்கின்ற நல்ல மென்மையான கூந்தலை உடைய
உமையம்மையாரைத் தழுவி இருத்தல் குணமாகுமோ?
Notes
1. இறைவனை நகைபடச் சொல்கின்றார் இப்பாடலிற்
காழிப் பிள்ளையார்.
2. சிலை - பாறை; தரளம் - முத்து; அரவம் - ஓசை;
முரவம் - பறை; உரவம் - பாம்பு; புனல் - நீர் (கங்கை);
புல்குதல் - தழுவுதல்.