திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருமருகல்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அறிவில் சமணும் அலர் சாக்கியரும்
நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார்
மறியேந்து கையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirumarugal
paN : indhaLam
Second thirumuRai
thirucciRRambalam
aRivil camNum alar cAkkiyarum
n^eRiyallana ceythanar n^inRuzalvAr
maRiyEn^thu kaiyAy marukaR perumAn
n^eRiyAr kuzali n^iRai n^IkkinaiyE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The foolish jains and blaming buddhists
did not righteous things. They will whirl (uselessly).
Oh the One with cub in hand! Lord of thirumarugal!
You removed the completeness of the well-formed
plait lady!
பொருளுரை
அறிவில்லாத சமணரும், புறங்கூறும் பௌத்தரும்
நன்னெறிக்குப் புறம்பானவை செய்தார்.
அவர்கள் பயனற்று உழல்வார்கள்.
மான்குட்டியை ஏந்திய கையவனே!
மருகற் பெருமானே! நன்கமைந்த கூந்தலுடைய
இப்பெண்ணின் முழுமை நீங்கச் செய்தனையே!
Notes
1. நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார்
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடி சேராதார்" - திருக்குறள்
சமணரும் சாக்கியரும் இறைவனடி வணங்காது
தம் முயற்சியையே நம்பி இருப்பதால் நன்னெறி
விட்டு இவ்வுலகிலேயே உழல்பவர்கள்.