திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருக்கயிலை
பண் சாதாரி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
புற்றரவு பற்றிய கை நெற்றியது
மற்றொருகண் ஒற்றை விடையன்
செற்றதெயில் உற்றதுமை அற்றவர்கள்
நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றமிலது எற்றென வினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
பெற்ற கயிலாயமலையே.
திருச்சிற்றம்பலம்
thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam thirukkayilai
paN cAthAri
mUnRAm thirumuRai
thiruchchiRRambalam
puRRaravu paRRiyakai n^eRRiyathu
maRRorukaN oRRai viDaiyan
ceRRatheyil uRRathumai aRRavarkaL
n^aRRuNaivan uRRan^agarthAn
cuRRumaNi peRRathoLi ceRRamoDu
kuRRamilathu eRRena vinAyk
kaRRavarkaL coRRokaiyin muRRumoLi
peRRa kayilAyamalaiyE.
thiruchchiRRambalam
Meaning:
Hand holds a snake; Fore-head holds an eye;
He holds a single bull (vehicle);
Incinerated the (three) forts; Embraced umA;
Patron of unattached; "How is His town encircled
by the splendor of gems and free from wrath
and other blemishes ?", thus inquiring the glory
of the discussion of the learnt is owned by the
mount kailAsh.
Notes:
1. Beautifully rhyming song (in fact the total padhikam)
blessed by the thamiz virakar.
2. ceRRathu - destroyed; eyil - fort; aRRavar - those
who have cut off; ceRRam - anger; eRRu - why ?.