சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலா
பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்
ஞானக்கொழுந்து நகராசன் தன் மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில் சீர்
நந்தா வனமலரும் மந்தாகினித் தடஞ்சேர்
செந்தாமரை மலர் நூறாயிரத்தால் - நொந்தா
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த
கற்பகம் ஈன்ற கமழ் பட்டினை உடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்
சூளாமணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா
மணிமகர குண்டலங்கள் காதுக்கு அணிந்தாங்கு
அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய
ஆரம் அவைபூண்டு அணிதிகழும் சன்ன
வீரந் திருமார்பில் வில் இலக - ஏருடைய
எண்தோட்கும் கேயூரம் பெய்து உதர பந்தனமும்
கண்டோர் மனம் மகிழக் கட்டுறீஇக் - கொண்டு
கடிசூத்திரம் புனைந்து கங்கணம் கைப்பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு - ....
திருச்சிற்றம்பலம்
cEramAn perumAL nAyanAr aruLiya thirukkayilAya nyAna ulA
padhinonRAm thirumuRai
thirucciRRambalam
pU maN^gai, poy thIr tharaNi pukaz maN^gai,
n^A maN^gai enRivarkaL n^angamaiththa - cEmaN^koL
nyAnakkozun^thu n^agarAcan than madaN6thai
thEn moyththa kunyciyin mEl ciththirippa - Unamil cIr
n^an^thA vana malarum man^thAkinith thaDanycEr
cen^thAmarai malar n^URAyiraththAl - n^on^thA
vayan^than thoDuththamaiththa vAcikai cUTTi
n^ayan^thikazum n^alluRuppuk kUTTip - payankoL
kulamagaLir ceytha kozunycAn^tham koNDu
thalamaliya Agan^ thazIik - kalaimalin^tha
kaRpagam InRa kamaz paTTinai uDuththup
poRkazalkaL kAlmER poliviththu - viRpagarum
cULAmaNi cEr muDikaviththuc cuTTi cEr
vALAr n^uthaRpaTTam mannuviththuth - thOLA
maNimakara kuNDalaN^kaL kAdhukku aNin^thAN^ku
aNivayirak kaNDikai ponnAN - paNi periya
Aram avai pUNDu aNi thikazum canna
vIran^ thirumArbil vil ilaka - EruDaiya
eNthOTkum kEyUram peythu udharaban^dhanamum
kaNDOr manam makizak kaTTuRIik - koNDu
kaDi cUththiram punain^thu, kaN^kaNam kaippeythu
vaDivuDaiya kOlam punan^thAN^gu - ....
thirucciRRambalam
Explanation of kailaya gnana ula:
Lady on the flower, lady of victory and lady of speach
- taking the basin (of matieral) prepared by them,
the Sprout of wisdom - the Girl of the king of mounts,
decorating on the tuft thronged by bees,
with flawless and perfect decayless garden flowers and
the lotus flowers from the mandhakini pond - a lakh in number
tied by vasanthan as garland for the crown,
added with nice substances the rich sandal paste
made by the noble women smeared all through the Form,
dressing with the well embroided splendid silk got from
the kaRpagam tree, gilded with golden anklets for the legs,
adorned with crown that has bow like crest-gem,
bejewelled with brilliant fore-head ornament,
garnished with unpierced gems as capricorn like ear-ring,
beautiful diamond rudrAksha golden string
well embellished necklace - wearing all these,
with the garland of valor (cannavIram) gloried on the holy chest,
for the majestic eight shoulders decked with circlets (for
upper hand), tied with waist dress enchanting the hearts of on-lookers,
putting on the waist band, having bracelet in the hands,
bearing a well shaped form, .....
Notes:
1. This is the description of the adornment done to God,
when He started off on a procession. In this first ulA
composition done at thirukkayilai itself in the presence
of God by cEramAn, that goes on further describing the
procession of God, the poet gives very nice taste of the
creativity.