logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

poyyanenaik-kurikkol-nee

பொய்யனேனைக் குறிக்கொள் நீ

 

சுந்தரர் திருப்பாட்டு


தலம்    : திருவெண்ணெய் நல்லூர்
பண்    : இந்தளம்
ஏழாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள் நீ
செடியார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறையுள்
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே?        7.1.4

திருச்சிற்றம்பலம்

cundharar thiruppATTu


thalam    :    thiruveNNey nallUr
paN    :    indhaLam
seventh thirumuRai

thirucciRRambalam

muDiyEn inip piRavEn peRin mUvEn peRRam UrthI
koDiyEn pala poyyE uraippEnaik kuRikkoL n^I
ceDiyAr peNNaith thenpAl veNNey n^allUr aruT thuRaiyuL
aDikEL unakku ALAy ini allEn enal AmE.        7.1.4

thirucciRRambalam

Meaning of Thevaram


I will not be terminated! Nor will I be born again! 
When born I would not grow old, oh the Rider of bull!
You please target me who am vicious and tell many kinds of lies only!
Oh the Reverend at the aruTthuRai abode of thiruveNNeynallUr
in the southern side of bushy peNnai river!
Having been Your slave, how can I say, "I am not"?!

பொருளுரை


(உன் அருள் பெற்ற காரணமாக) 
நான் மரணமடைய மாட்டேன்! பிறக்க மாட்டேன்! பிறந்துள்ள பொழுதும்
மூப்படையமாட்டேன்! இடபம் ஊர்தியாகக் கொண்ட பெருமானே!
கொடியவனாகவும், பல பொய்களே கூறுபவனாகவும் உள்ள என்னைக்
குறியாகக் கொண்டு (உய்ய வை)!
சிறுதாவரங்கள் உள்ள பெண்னை நதியின் தென்பால் திருவெண்ணெய் நல்லூரில்
திருவருட்துறையில் வீற்றிருக்கும் அடிகளே! 
உனக்கு அடிமையாக இருந்துகொண்டு, "இல்லை" எனக் கூற முடியுமா?

Notes


1. பெற்றம் - இடபம்; செடி - சிறுதாவரம்.

Related Content

Drive Away My Fear

Our Savior for the life here and the other world

Remover of Hunger

Is God sectarian ?

Calling out to God