logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

piravi-noykkut-thirugnanasambanthar-koorum-marunthu

பிறவி நோய்க்குத் திருஞானசம்பந்தர் கூறும் மருந்து

 

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம்    :    திருவண்ணாமலை
பண்    :    நட்டபாடை
முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகிக்
கருகும் மிடறுடையார் கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram
thalam    :    thiruvaNNAmalai
paN    :    naTTapADai
First thirumuRai

thirucciRRambalam

perugum punal aNNAmalai piRai cEr kaDal n^anycaip
parugum thanai thuNivAr poDi aNivAr athu parugik
karugum miDaRuDaiyAr kamaz caDaiyAr kazal paravi
urugum manam uDaiyAr thamakku uRun^Oy aDaiyAvE.

thirucciRRambalam

Meaning:
The thiruvaNNAmalai sourcing water,
One Who dared to drink the poison of the ocean with crescent,
Ash-smeared,
One Who has the black throat due to drinking that,
One with fragrant twined hair
- hailing His ankleted feet those who have the melting 
heart, for them the chronic disease would not reach.

பொருளுரை:
நீர்ப் பெருக்கம் உடைய திருவண்ணாமலையாகியவரும்,
பிறைச்சந்திரன் தோன்றிய கடலின் விடத்தைப் பருகுகின்ற 
துணிவினை உடையவரும், திருநீறு அணிந்தவரும்,
அவ்விடத்தைப் பருகிக் கண்டம் கறுத்தவரும்,
மணம் கமழ்கின்ற திருச்சடையை உடையவரும் ஆகிய
பெருமானின் கழலணிந்த திருவடிகளை வாழ்த்தி,
உருகுகின்ற உள்ளம் உடையவர்களைக் கொடுமையான
நோய் தாக்காது.

Notes:
1. இங்கு அண்ணாமலை என்பதை இறைவன் திருநாமமாகவே
திருஞானசம்பந்தர் பயன்படுத்தியுள்ளார்.
2. பிறை சேர் கடல் - சந்திரன் பாற்கடலில் தோன்றியது என்பதை
நினைவில் கொள்க.
3. நஞ்சைப் பருகும் தனை துணிவார் - தேவரும் அசுரரும் யாவரும்
அஞ்சி ஓடிய விடத்தைப் பருகத் துணிந்தவர், சிவபெருமானே
என்று எடுத்துக் காட்டுகிறார் திருஞானசம்பந்தர்.
4. உறுநோய் - வினைத்தொகை. முக்காலத்திற்கும் (உற்ற, உறுகின்ற, உறப்போகும்)
பொருந்துவதாக, இங்கு சிறப்பாகப் பிறவி நோய் எனப் பொருள் பெறலாம்.
திருவண்ணாமலையை நினைக்க முத்தி.
5. புனல் - நீர்; மிடறு - கண்டம்.

Related Content

Sure loss of evils

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொட

திருவண்ணாமலையின் இயற்கை அழகு

மரணத்தின் திறம் போக்கிய திருவடிகள்

அண்ணாமலையார் செயல்கள்