logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

perunthunpathilum-vunai-paatuthal-vozhiyayn

பெருந்துன்பத்திலும் உன்னைப் பாடுதல் ஒழியேன்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

  
தலம்     :  திருவாவடுதுறை 
பண்     :  காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் 
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென் நா 
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த 
சந்த வெண்பொடியணி சங்கரனே. 
    இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் 
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruvAvaDuthuRai 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
ven^thuyar thOnRiyOr veruvuRinum 
en^thAyun aDiyalAl EththAthen n^A 
ain^thalai aravu koNDu araikkacaiththa 
can^tha veN poDiyaNi caN^karanE. 
    ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl 
    athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

   
Even if blazing gloom appears frighteningly, 
oh my Mother, other than Your Feet, my tongue will not hail! 
Oh the Meritorious Who has tied the five headed snake 
to waist and wears the fragrant white powder (ash)! 
    If this is the way to govern us and nothing to give us, 
    that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai! 
 
பொருளுரை

   
கொடுந்துயர் தோன்றி அஞ்சும்வகையதானாலும் 
எம் தாயே, உன் திருவடிகளன்றி எனது நாக்கு புகழாது! 
ஐந்து தலைகளுடைய பாம்பினை இடுப்பில் அணிந்த, 
நறுமணமுடைய வெண்பொடியினை (திருநீற்றை) அணிந்த 
நன்மை செய்பவனே! 
    இவ்வகையே எம்மை ஆளும் வகையாக, 
    எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால், 
    அதனையே உனது திருவருளாகக் கொள்வோம் 
    திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே! 
 
Notes

  
1. வெரு - அச்சம்; அரை - இடுப்பு; அசைத்தல் - உடுத்தல்; 
சந்தம் - நறுமணம். 

Related Content

Drive Away My Fear

Get firm devotion - the Glorious wealth

Drive away my fear

எல்லாம் ஈசன் அருள்

உடல் தளர்ந்த பொழுதும் உனை ஏத்துவேன்