திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : சீகாழி
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மலி கடுந்திரை மேல் நிமிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்திலம் விழக்
கலி கடிந்தகையார்
மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட
மெலியுந் தீவினை நோயவை
மேவுவார் வீடே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : seerkAzhi
paN : seekAmaram
Second thirumuRai
thirucciRRambalam
mali kaDun^thirai mEl n^imirn^thethir
van^thu van^thoLir n^iththilam vIzak
kali kaDintha kaiyAr
maruvuN^ kalikkAzi
valiya kAlanai vITTi mANithan
innuyir aLiththAnai vAzththiDa
meliyum thIvinai n^Oyavai
mEvuvAr vIDE.
thirucciRRambalam
Meaning of song:
By hailing the Lord Who overwhelmed the death
and gave the bachelor (mArkaNDeyar) the nice life
Who resides at roaring cIrkAzi where the pearls
ride on the abundant huge tides and fall (in the shore),
the place where those whose hands conquered kali
(by the philanthropy), the illness of bad vinai will
lean out and they would get liberated.
Notes:
thirai - tide; n^iththilam - pearl; mANi - brahmachAri.