திரு ஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை உதையுண்டு அவை உருள
எரியாடிய இறைவர்க்கு இடம் இன வண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலையதுவே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvaNNAmalai
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
karikAlana kuDar koLvana kazuthADiya kATTil
n^ariyADiya n^aguveN thalai uthaiyuNDu avai uruLa
eriyADiya iRaivarkku iDam ina vaNDicai murala
ariyADiya kaNNALoDum aNNAmalaiyathuvE.
thirucciRRambalam
Meaning of Thevaram
In the cemetery where the ghosts of burnt-off-legs
grabbing the liver, dance,
the white smiling skulls played around by foxes
kicked around rolling, the God Who fire-dances
- His place along with the veined-eye-Lady
is thiruvaNNAmalai where the superior beetles hum.
பொருளுரை
கரிந்த கால்கள் உடையனவும், குடரைக் கவர்ந்து தின்னுவனவும்
ஆகிய பேர்கள் ஆடிய காட்டில், சிரித்தபடி இருக்கின்ற
வெண்மையான தலைகள் நரிகளால் உதைபட்டு உருள,
(அங்கு) எரியேந்தி ஆடுகின்ற இறைவருக்கு,
வரியுடைய கண்களையுடைய அம்மையினோடு இருக்கும்
இடம் யாதெனில், இன வண்டுகள் ஒலிக்கின்ற திருவண்ணாமலையே
ஆகும்.
Notes
1. இயல்பாகச் சுடுகாட்டில் நடம் இடும் இறைவர்,
தம் துணையான மெல்லியலாளொடு இருக்கின்ற இடம்
இனிய வண்டின் பாடலொடு கூடிய திருவண்ணாமலை,
என நயம் செய்கிறார் ஞானசம்பந்தர்.
2. பார்க்க: காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்கள்
/thirumurai/eleventh-thirumurai/289/eleventh-thirumurai-karaikkal-ammaiyar-peyar-thirualankattu-mootha-thirupathigam
3. கழுது - பேய்; முரல - ஒலிக்க; அரி - கண்வரி.