திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : பொது
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
பஞ்சாக்கரத் திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணமாவன அஞ்செழுத்துமே. 3.22.9
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : pothu
paN : gAndhAra panycamam
Third thirumuRai
panycAkkarath thiruppathikam
thirucciRRambalam
kArvaNan n^Anmukan kANuthaRku oNAc
cIrvaNac cEvaDi cevvi n^ALthoRum
pErvaNam pEcip pithaRRum piththarkaTku
ArvaNamAvana anycezuththumE. 3.22.9
thirucciRRambalam
Meaning of Thevaram
For the mad devotees, who talk and rave the
glorious names everyday on the qualities of the
Perfect-colorful-Feet That were beyond vision of
the cloud-colored and four-faced,
the excitement for them are the Holy Five Syllables.
பொருளுரை
மேகவண்ணனும், நான்முகனும் காண இயலாத,
சீர்மையும் அமைப்பும் உடைய செம்மையான திருவடிகளின்
பெருமைகளை நாள்தொறும் பெயர் பல கொண்டு பேசிப்
பிதற்றும் பித்துடையவராகிய அடியவர்களுக்கு,
ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைவன திருவைந்தெழுத்தே!
Notes
1. கார் - மேகம்; செவ்வி - குணநலன்கள்; ஆர்வணம் - ஆர்வம்.