logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

pattini-kitanthalum-paramanai-ninaimin

பட்டினி கிடந்தாலும் பரமனை நினைமின்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    : திருவாவடுதுறை 
பண்    : காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் 
ஒண்மலர் அடியலால் உரையாதென் நாக் 
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் 
அண்ணலும் அளப்பரிதாயவனே. 
    இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் 
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.        3.4.9 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruvAvaDuthuRai 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
uNNinum pacippinum uRaN^giunum n^in 
oNmalar aDiyalAl uraiyAthen n^Ak 
kaNNanum kaDikamaz thAmarai mEl 
aNNalum aLapparithAyavanE. 
    ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl 
    athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE.        3.4.9 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
Whether I eat, starve, sleep,  
other than Your beautiful floral Feet my tongue will not say (anything)! 
Oh the One immeasurable by the kRishNa and  
the reverend on the fragrant lotus! 
    If this is the way to govern us and nothing to give us, 
    that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai! 
 
பொருளுரை

  
உணவு உண்டாலும், பசித்து இருந்தாலும், உறங்கினாலும் 
உன்னுடைய அழகிஅ மலர்த் திருவடிகளை அல்லால் என் நாக்கு கூறாது. 
கண்ணனும், நறுமணம் கமழும் தாமரை மேல் உறையும் 
பெரியோனும் அளக்க இயலா வகை நின்றவனே! 
    இவ்வகையே எம்மை ஆளும் வகையாக, 
    எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால், 
    அதனையே உனது திருவருளாகக் கொள்வோம் 
    திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே! 
 
Notes

  
1. ஒ. நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் 
     மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் 
     மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை 
     குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்  
             - திருத்தொண்டர் புராணம் 
2. தாமரை மேல் அண்ணல் - பிரமன் 
3. ஒண்மை - அழகு; கடி - மணம். 

Related Content

Drive Away My Fear

Get firm devotion - the Glorious wealth

Drive away my fear

எல்லாம் ஈசன் அருள்

உடல் தளர்ந்த பொழுதும் உனை ஏத்துவேன்