திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருவீழிமிழலை
பண் மேகராகக் குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
காணுமாறரிய பெருமானாகிக்
காலமாய்க் குணங்கள் மூன்றாய்ப்
பேணு மூன்றுருவாகிப் பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான் கோயில்
தாணுவாய் நின்ற பரதத்துவனை
உத்தமனை இறைஞ்சீர் என்று
வேணுவார் கொடி விண்ணோர் தமை விளிப்ப
போல் ஓங்கு மிழலையாமே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thiruvIzimizalai
paN mEgarAgak kuRinyci
muthal thirumuRai
thirucciRRambalam
kANumARariya puermAnAkik
kAlamAyk kuNaN^kaL mUnRAyp
pENu mUnRuruvAkip pErulakam
paDaiththaLikkum perumAn kOyil
thANuvAy n^inRa para thaththuvanai
uththamanai iRainycIr enRu
vENuvAr koDi viNNOr thamai viLippa
pOlON^gu mizalaiyAmE.
thirucciRRambalam
Explanation of tevaram song:
As the Lord difficult to be seen, as the time,
as the three-fold qualities, as the three forms
maintained, the Lord Who creates and preserves
the huge world, His temple is lofty thiruvIzimizalai,
where the flag on the bamboo appears to be
calling the celestials saying, "Salute the Supreme
Principle that stood Eternal, the Ultimate !"
Notes:
1. guNaN^kaL mUnRu - satva, raja, tamas;
mUnRu uru - brahma, viShNu, rudra.
2. aLiththal - to protect; thaNu - Eternal;
vENu - bamboo; viLiththal - to call.