திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி
பண் நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
செற்றவர் தம் அரணம் அவற்றைச்
செவ்வழல்வாய் எரியூட்டி நின்றுங்
கற்றவர் தாம் தொழுதேத்த நின்றான்
காதலிக்கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வெய்தி நல்ல
உம்பருள்ளார் தொழுதேத்த நின்ற
பெற்றமரும் பெருமானையல்லாற்
பேசுவதும் மற்றொர் பேச்சிலோமே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam kIzaiththirukkATTuppaLLi
paN naTTapADai
muthal thirumuRai
thirucciRRambalam
ceRRavar tham araNam avaRRaic
cevvazalvAy eriyUTTi n^inRuN^
kaRRavar thAm thozuthEththa n^inRAn
kAdhalikkappaDuN^ kATTuppaLLi
uRRavar thAm uNarveythi n^alla
umbaruLLAr thozudhEththa n^inRa
peRRamarum perumAnaiyallAR
pEcuvathum maRRor pEccilOmE.
thirucciRRambalam
Translation of thevaram song:
Burning the forts of the antagonists in the mouth of
red-fire, He stood to be worshipped by the learnt, at
kATTuppaLLi to be loved deeply. The Lord Who sits on
the bull, stood to be hailed by the celestials,
getting to Him and worshipping with passion, but for
Him, we do not have words to speak.
Notes:
1. ceRRavar - animosity; araNam - fort; umbar -
celestials; pRRam - bull.