திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருக்கழுமலம்
பண் : கொல்லி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே. 3.24.9
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirukkazumalam
paN : kolli
Third thirumuRai
thirucciRRambalam
n^eDiyavan biramanum n^inaippu arithAy avar
aDiyoDu muDi aRiyA azal uruvinan;
kaDikamaz pozilaNi kazumala vaLan^agarp
piDin^aDai avaLoDum perun^thakai irun^thathE. 3.24.9
thirucciRRambalam
Meaning of Thevaram
Form of fire Whose foot and head are inexplorable
and unimaginable to the long (viShNu) and brahma!
That Magnanimous along with the Lady of female elephant
like walk is at the prosperous town of thirukkazumalam
embellished with fragrant gardens.
பொருளுரை
நெடிதுயர்ந்தவனும் (திருமால்), பிரமனும் நினைக்கவும் அரிதாக,
அவர்கள் திருவடியும் திருமுடியும் அறியாதவகை நின்ற கனல் உருவன்;
நறுமணம் கமழும் சோலைகள் அணிசெய்யும் திருக்கழுமலமாம்
வளமிக்க நகரில் பெண்யானை போன்ற நடையுடைய
உமையம்மையோடு சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
Notes
1. கடி - மணம்; பொழில் - சோலை; பிடி - பெண்யானை.