திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருமருகல்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வாக்கினையே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirumarugal
paN : indhaLam
Second thirumuRai
thirucciRRambalam
thuNi n^IlavaNNam mukil thOnRiyanna
maNi n^IlakaNTam uDaiyAy marugal
kaNi n^IlavaNDAr kuzalAL ivaL than
aNi n^Ila oN kaN ayarvAkkinaiyE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Oh the Owner of thirumarugal, You have
the gemmy black throat in the brilliant black color
- like that of the cloud!
You made the black beautiful well-formed eyes of
this lady of plait crowded with the black beetles of the fields,
to be weary!
பொருளுரை
அடர்ந்த கரு நிற மேகத்தப் போல மணியான
திருநீலகண்டத்தை உடைய மருகற் பெருமானே!
மருத நிலத்தின் வண்டுகள் மொய்த்த கூந்தலை
உடைய இவள்தன் நேர்த்தியான அழகிய கரிய
கண்களை அயர்ந்து போகச்செய்தனையே!
Notes
1. திருநீலகண்டமே பெருமான் உயிர்களுக்கு ஊறு செய்ய வந்த
கொடு விடத்தை ஒடுக்கிய கருணையின் அறிகுறி. அடியவர்கள்
பெருமானின் கருணையை வேண்டுமிடத்து மிகுதியாகத்
திருநீலகண்டத்தை அழைப்பது காணலாம்.
(அ. கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.,
ஆ.தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் - சம்பந்தர்
இ. ஐயர் அமுது செய்த வெவ்விடம் முன் தடுத்து எம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் - புராணம்.)
2. துணி - ஒளி; முகில் - மேகம்; கணி - மருத நிலம்;
ஒண்மை - அழகு.