திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்பிரமபுரம்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சிலையது வெஞ்சிலையாகத் திரிபுரமூன்று எரிசெய்த
இலைநுனை வேற்றடக்கையன் ஏந்திழையாள் ஒருகூறன்
அலைபுனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppiramapuram
paN : cI kAmaram
Second thirumuRai
thirucciRRambalam
cilaiyathu venycilaiyAkath thiripuramUnRu ericeytha
ilai n^unai vEl thaDakkaiyan En^thizaiyAL orukURan
alaipunal cUz piramapuraththu arumaNiyai aDipaNin^thAl
n^ilaiyuDaiya perunycelvam n^IDulagiR peRalAmE.
thirucciRRambalam
Meaning of Thevaram
One holding in long hands the (sharp) leaf like edge spear,
Who burnt the three puras with the mount as the lethal bow;
Partner of beautiful Lady; When the Rare Gem at
thiruppirampuram surrounded by tidal waters is saluted,
one can get eternal great wealth in this grand world.
பொருளுரை
மலையே வலிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்த
இலை போன்ற கூரிய சூலத்தைக் கொண்ட நீண்ட கைகளையுடையவன்;
அழகிய பெண்ணை ஒரு கூறு உடையவன்;
நீரலை சூழ்ந்த திருப்பிரமபுரத்து அருமணியை அடிபணிந்தால்
நிலையான பெருஞ்செல்வத்தை இந்தப் பேருலகிலேயே பெறலாகும்.
Notes
1. சிலை - மலை/வில்; தடக்கை - நீண்ட கை; ஏந்திழை - அழகிய பெண்.