திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கச்சியேகம்பம்
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை
பெண்ணோடு ஆண் என்று பேசற்கு அரியவன்
வண்ணமில்லி வடிவு வேறாயவன்
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே.
திருச்சிற்றம்பலம்
appar aruLiya thEvAram
thalam : thirukkatchiyEkambam
thirukkuRunthokai
Fifth thirumuRai
thirucciRRambalam
paNNil Ocai pazaththinil in cuvai
peNNODu AN anRu pEcaRku ariyavan
vaNNamilli vaDivu vERAyavan
kaNNil uL maNi kacci EkambanE.
thirucciRRambalam
Explanation of song:
Like the sound of tune, nice taste of the fruit,
female as well as male - such difficult to be described;
Colorless; Of vivid forms;
The Apple in the eye is Lord kacci Ekamban.
Notes:
1. appar hails the subtle nature of the God Who
is immanent in all things and at the same time
transcendent beyond forms! Though It is such
a rare One, for the devotees It is so dear like the eye.