திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்பிரமபுரம்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தாமென்றும் மனம் தளராத் தன்மையராய் உலகத்துக்
காமென்று சரண் புகுந்தார் தமைக் காக்குங் கருணையினான்
ஓமென்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன் உடலெரியக் கனல் சேர்ந்த கண்ணானே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppiramapuram
paN : cI kAmaram
Second thirumuRai
thirucciRRambalam
thAmenRum manam thaLarAth thanmaiyarAy ulagaththukku
AmenRu caraN pukun^thAr thamaik kAkkum karuNaiyinAn
OmenRu maRai payilvAr piramapuraththu uRaikinRa
kAman than uDaleriyak kanal cErn^tha kaNNAnE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The Merciful Who protects those who have taken refuge
for the benefit of the world without ever swerving in their
determination. He is the One having the eye with the fire
to burn the body of kAma; the One residing at
thiruppiramapuram where people practice vedas with Om.
பொருளுரை
தாம் என்றும் மனம் தளராத தன்மையராய், உலகத்தின் நன்மைக்கு
ஆகும் என்று கருதி அடைக்கலம் புகுந்தவர்களைக் காக்கின்ற
கருணையன்; ஓம் என்ற ஒலியோடு திருமறைகளைப் பயில்கின்ற
திருப்பிரமபுரத்து உறைகின்ற அப்பெருமான் காமனுடைய உடல்
எரியுமாறு தீ உமிழ்ந்த கண்ணை உடையவன்.
Notes
1. உலகத்துக்கு ஆம் என்று சரண் புகுந்தார் -
அடியவர்கள் இறைவனிடம் அடைக்கலம் புகுவதால் அவர்களுக்கு
மட்டும் பயன் என்பதன்றி அவரைச் சார்ந்த அனைவருக்கும்
நன்மை.
ஒ. இமாம் ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய ப்ரபராமஹே மதிம்
யதா ந: சமசத்விபதே சதுஷ்பதே விச்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின் நநாதுரம் - ஸ்ரீருத்ரம்
(உருத்திரப் பெருமானிடத்தில் எம் சிந்தை நிலைபெறட்டும்.
அதனால் நாங்களும், இருகால் பிராணிகளும், நாற்கால் பிராணிகளும்,
இவ்வுலகும் வளமுடையதாகவும், இக்கிராமம் துன்பமற்றதாகவும் விளங்கும்.)
நம் ஆன்றோர்கள் அனைவரும் பெரியோரைச் சார்ந்து ஒழுகுதலைப்
பெருநன்மையாகப் போற்றியுள்ளமையை உணரலாம்.