கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
தலம் திருவிடைமருதூர்
பண் பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கலங்கல் அம்பொய்கைப் புனல் தெளிவிடத்துக்
கலந்த மண்ணிடைக் கிடந்தாங்கு
நலங்கலந்தடியேன் சிந்தையுட் புகுந்த
நம்பனே வம்பனேனுடைய
புலங்கலந்தவனே என்று நின்றுருகிப்
புலம்புவார் அவம் புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான்
மருவிடந் திருவிடைமருதே.
திருச்சிற்றம்பலம்
karuvUrththEvar aruLiya thiruvicaippA
thalam thiruviDaimarudhUr
paN panycamam
onbadhAm thirumuRai
thirucciRRambalam
kalaN^kalam poykaip punaltheLiviDaththuk
kalan^tha maNNiDaik kiDan^thAN^gu
n^alaN^kalan^thaDiyEn cin^thaiyuT pukun^tha
n^ambanE vambanEnuDaiya
pulaN^kalan^thavanE enRu n^inRurukip
pulambuvAr avam pukAr aruvi
malaN^kalaN^ kaNNiR kaNmaNi yanaiyAn
maruviDam thiruviDaimarudhE.
thirucciRRambalam
Explanation of song:
"Like the water that is muddy in the beautiful pond
when bacomes clear, stay amidst the sediments,
our Beloved Who came into the mind meritoriously
of the slave, me! Oh the One Who mixed with the
senses of me, the worthless talker!" - saying so
one who laments they would not get to misery.
The One Who is like the pupil in the eye of those
who shed tears like falls - His place is thiruviDaimarudhUr.
Notes: