logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

mitai-thirum-chelvam-perukum-payrarul-perum-vazhi

பீடை தீரும், செல்வம் பெருகும், பேரருள் பெறும் வழி


திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    : பொது  
பண்    : காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
பஞ்சாக்கரத் திருப்பதிகம் 
 
திருச்சிற்றம்பலம் 
 
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்  
பீடை கெடுப்பன; பின்னை நாள்தொறும் 
மாடு கொடுப்பன; மன்னு மாநடம் 
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.        3.22.7 
 
திருச்சிற்றம்பலம் 

 

thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    pothu 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
panycAkkarath thiruppathikam 
 
thirucciRRambalam 
 
vIDu piRappai aRuththu meccinar 
pIDai keDuppana; pinnai n^ALthoRum 
mADu koDuppana; mannu mAn^aDam 
ADi ugappana anycezuththumE.        3.22.7 
 
thirucciRRambalam 
 
Meaning

   
Cutting off the lapsing birth, ruins the gloom 
for those who appreciate! 
Subsequently everyday gives the wealth; 
Pleases the Lord Who Dances great 
eternally - That is the Holy Five Syllables! 
 
பொருளுரை

   
வீழ்தலாகின்ற பிறப்பினை நீக்கி, மதித்துக் 
கூறுபவர்களின், பீடைகளைத் தீர்ப்பன; 
பின் அத்தகையோர்க்கு நாள்தொறும் செல்வம் கொடுப்பன; 
என்றும் நில்லாது பெருநடனம் செய்கின்ற 
இறைவனை மகிழச் செய்வன - திருவைந்தெழுத்தாகும்! 
 
Notes

  
1. மெச்சினர் - இறைவனுடைய திருவைந்தெழுத்தினை  
உணர்ந்து ஓதுதல் (காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்) 
2. வீடுபிறப்பு - அழிதலை உடைய பிறப்பு; மாடு - செல்வம்; 
மன்னுதல் - நிலையுடையதாதல். 

Related Content

When to chant the mantra ?

திருவாசகம் முற்றோதல் Thiruvachakam Mutrodhal Parayanam

அடியார்களின் சொந்த வீடு

இவையெல்லாம் ஐந்தே

இப்பேரண்டத்தை ஆள வேண்டுமா?