logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

mayilapur-kabalisvarar-thirukaarthikaip-peruvizhaa

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கார்த்திகைப் பெருவிழா

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருமயிலாப்பூர் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் 
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள் 
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்  
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thirumayilAppUr 
paN    :    cIkAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
vaLaikkai maDan^allAr mAmayilai vaNmaRugil 
thuLakkil kapAlIccaraththAn thol kArththikai n^AL 
thaLaththEn^thu iLamulaiyAr thaiyalAr koNDADum 
viLakkIDu kANAthE pOthiyO pUmpAvAy. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
In the beautiful streets of the great mayilai of bangle worn ladies, 
on the ancient thirukkArthikai day of the imperturbable Lord of thirukkapAlIccaram 
the lighting of lamps by the ladies of young sandal worn breasts, 
oh pUmpAvai, without seeing that do you go? 
 
பொருளுரை

  
வளைகள் அணிந்த கைகளுடைய பெண்கள் வாழும் மா மயிலாப்பூரின் 
அழகான வீதிகளில், கலக்கமற்ற திருக்கபாலீச்சரத்து இறைவனின்  
தொன்மையான விழாவான திருக்கார்த்திகை நாளில் சந்தனம் 
அணிந்த இளமுலை மாதர்கள் கொண்டாடும் விளக்கேற்றுதலைக் 
காணாமல் போகலாமோ, பூம்பாவையே! 
 
Notes

  
1. இப்பதிகம் முழுமையும் மயிலைத் திருக்கபாலீச்சரத்தில் நடந்த 
விழாக்களின் பெருமையைக் கூறுகின்றார் ஞானமுண்ட பிள்ளையார். 
2. திருக்கார்த்திகைப் பெருநாள் சங்க இலக்கியம், புராணங்களில் 
புகழ்ந்து கூறப்படும் விரதம். அதன் பழமைச் சிறப்பு கருதி 
தொல் கார்த்திகை நாள் என்று குறித்தனர். 
அட்ட மாவிரதங்களில் ஒன்றாகிய திருக்கார்த்திகை விரதம்  
பற்றிய குறிப்பு: Thiruk Karththikai 
3. வண்மை - அழகு; மறுகு - தெரு; துளக்கம் - கலக்கம்; 
தளம் - சாந்து. 

4. திருமுறைகளில் விளக்கீடு / தீப வழிபாடு

Related Content

Miracle of Resurrection