திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருமருகல்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியாததோர் தீத் திரளாயவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக்கினையே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirumarugal
paN : indhaLam
Second thirumuRai
thirucciRRambalam
eriyAr caDaiyum aDiyum iruvar
theriyAthathOr thIth thiraLAyavanE
mariyAr piriyA marukaR perumAn
ariyAL ivaLai ayarvAkkinaiyE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Oh the One Who became the block of fire,
glowing crown and the base of Which
was untraceable to the two!
Oh the Lord of thirumarugal, Whom the
immortals do not leave,
You have put to fatigue this rare lady!
பொருளுரை
எரிகின்ற சடையையும், திருவடியையும் இருவர் (பிரம, திருமால்)
காண இயலாத வண்ணம் தீத்திரளாக நின்றவனே!
இறப்பில்லாதவர்கள் பிரியாத மருகற் பெருமானே!
அரியவளாகிய இவளை அயர்வு செய்தனையே!
Notes
1. மரியார் - தேவர் என்று ஒரு பொருள் கொள்ளலாம்.
எனினும் முத்தி நிலையில் உள்ள ஆன்மாக்கள் என்று
பொருள் கொள்வதே இங்கு சிறப்பாக அமையும்.
2. அரியாள் இவள் - கொடுமையான துன்ப நிலையிலும்
இறைவனைப் புறக்கணித்த்லோ, இகழ்தலோ செய்யாமல்
சிவபெருமானின் திருக்கருணையை இரந்து நின்றதால்
அப்பெண் அரியவள்.