திருஞான சம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பீலிம்மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலிம்மணி தரை மேல் நிறை பொழியும் விரி சாரல்
ஆலிம் மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி நினைவார் வினையிலரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvaNNAmalai
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
pIlim mayil peDaiyODu uRai pozil cUz kazai muththam
cUlimmmaNi tharai mEl n^iRai poziyum viri cAral
Alim mazai thavazum pozil aNNAmalai aNNal
kAlan vali tholai cEvaDi n^inaivAr vinaiyilarE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The forests where the feathered peacocks reside with their females;
The wide foothill where the bamboos shower on the ground
the pearls from their embryo;
The forest where clouds dense with droplets crawl;
One who thinks of the Perfect feet of the Reverend of
such thiruvaNNAmalai, that removed the power of the
divine of death, they are free from vinai.
பொருளுரை
பீலியுடைய ஆண்மயில்கள் தங்கள் பெண்மயில்களோடு வாழும் பொழில்களும்,
மூங்கில்கள் தங்கள் சூலிலிருந்து முத்துக்களை நிலமெங்கும் பொழிகின்ற
விரிந்த சாரலும், நீர்த்துளிகள் நிறைந்த மேகங்கள் தவழ்கின்ற (உயர்ந்த)
காடுகளும் உடைய திருவண்ணாமலையில் உறைகின்ற அண்ணலாரின்
காலனுடைய வலிமையை நீக்கிய சேவடிகளை யார் நினைக்கின்றார்களோ
அவர்கள் வினை நீங்கப்பெற்றவர்கள்.
Notes
1. பெடை - பெண் (மயில்); கழை - மூங்கில்; ஆலி - நீர்த்துளி;
வலி - வலிமை.