திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே;
புழுவுக்கு இங்கு எனக்குள்ள பொல்லாங்கில்லை;
புழுவினுங் கடையேன் புனிதன் தமர்
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே. 5.91.4
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : pothu
thirukkuRunthokai
Fifth thirumuRai
thirucciRRambalam
puzuvukkum guNam n^Angu enakkum athE;
puzuvukku iN^gu enakkuLLa pollAN^gillai;
puzivinum kaDaiyEn punithan thamar
kuzuvukku evviDaththEn cenRu kUDavE. 5.91.4
thirucciRRambalam
Meaning of Thevaram
The worm also has four qualities and me too;
The worm does not have my wickedness;
Worse than even the worm, where am I to join
the assembly of the people of the Immaculate Lord?!
பொருளுரை
புழுவுக்கும் நான்கு குணங்கள், எனக்கும் அந்நான்கே;
புழுவுக்கு என்னைப் போலப் பொல்லாங்கு இல்லை;
ஆதலால் புழுவினும் கீழான நான்,
புனிதப்பெருமானின் அடியவர் திருக்கூட்டத்திற்கு
எவ்விடத்தேன், அவர்களோடு சென்று கூடுதற்கு?!
Notes
1. புழுவுக்கும் மனிதனுக்கும் உள்ள நான்கு குணங்கள்
- இரை தேடுதல்; உண்ணுதல்; உறங்குதல்; இன்பதுன்ப நுகர்ச்சி;
புழுவுக்கோ மனிதனுக்கு இருப்பது போன்று பொறாமை
வஞ்சனை போன்றவை இல்லை. இவ்வடிப்படையில் பார்த்தால்
மனிதன் விலங்கினும் - புழுவினும் கீழானவன்.
அவ்விலங்குகள் போன்றே வாழ்ந்து செத்து மடிகிறான்.
மனித வாழ்வைச் செம்மைப்படுத்தி இறைவன் திருவடிகளில்
நிலைபெறச் செய்பவர்களே வாழ்வின் பயன் பெற்றவர்கள்.