திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருமருகல்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக்கினையே.
திருச்சிற்றம்பலம்
thalam : thirumarugal
paN : indhaLam
Second thirumuRai
thirucciRRambalam
ilaN^gaikku iRaivan vilaN^gal eDuppath
thulaN^gav viral UnRalum thOnRalanAy
valaN^goL mathil cUz marukaR perumAn
alaN^gal ivaLai alarAkkinaiyE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Oh the Lord of thirumarugal surrounded by walls,
Who was circumambulated (worshipped) by the lord
of ilangai who lifted up the Mount and as soon as
(You) planted a finger properly, became clueless!
You have made this garland (lady) dried out!
பொருளுரை
இலங்கைக்கு அதிபதி மலையை எடுத்த பொழுது,
(நீவீர்) ஒரு விரலை நன்றாக வைத்திட,
(இடர்ப்பட்டு) எதுவும் தோன்றாதவனாக ஆகிப்பின்
வலம் வந்து வணங்கும் மதில் சூழ்ந்த மருகற் பெருமானே,
மாலை போற இவள் வாடுமாறு செய்தனையே!
Notes
1. இறைவன் - அதிபதி; விலங்கல் - மலை;
துலங்க - நன்றாக; அலங்கல் - மாலை; அலர் - வாடிய மலர்.