திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. 5.95.11
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : pothu
thirukkuRunthokai
Fifth thirumuRai
iliNgapurANath thirukkuRunthokai
thirucciRRambalam
ceN^kaNAnum biramanum thammuLE
eN^gum thEDith thirin^dhavar kANgilar
iN^guRREn enRu iliN^gaththE thOnRinAn
poN^gu cenycaDaip puNNiya mUrththiyE. 5.95.11
thirucciRRambalam
Meaning of Thevaram
Red eyed (viShNu) and brahma amongst them,
searched everywhere and roamed unable to see;
The Lord of Virtuous form with brimming twined red hair
appeared in the linga, "I am here!"
பொருளுரை
செங்கண் திருமாலும், பிரமனுமாகிய இருவரும்
எங்கும் தேடித் திரிந்தும் (சிவபெருமானைக்) காண்கிலர்;
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியான பெருமான்
"இங்குள்ளேன்!" என்று சிவலிங்கத்தில் தோன்றினான்.
Notes
1. இப்பதிகம் முழுமையும் சிவலிங்கம் தோன்றிய வரலாறு
குறித்தமையால் இது இலிங்க புராணத் திருக்குறுந்தொகை
எனப்பட்டது.
2. பரசிவமாக - வடிவு வண்ணமெலாம் கடந்து நிற்கும் -
பரம்பொருளைக் காண இயலாதாக உயிர்கள் துன்புற்றபொழுது
இறைவன் கருணையின் காரணமாக நாம் வழிபட இலிங்கமாக
- அப்பரசிவத்தைக் குறிக்கும் ஒரு குறியாகத் - தோன்றினான்.
இதுவே சிவலிங்கத் திருமேனியாகும். இதனை சதாசிவ மூர்த்தம்
என்பர்.
இதன் பின் இறைவன் திருக்கருணையால் உருவங்கள் பல
கொண்டவை மாகேச்சுர வடிவங்கள் எனப்படும். இவை பற்றிக்
காண Maheshvara Murtams-25