logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

kurrap-patiyal-thayaaraa

குற்றப் பட்டியல் தயாரா?

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருக்கழுமலம்  
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
குறைவு அளைவது மொழி குறைவொழி நெஞ்சமே 
நிறைவளை முன்கையாள் நேரிழையவளொடும் 
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் 
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.        3.24.7 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thirukkazumalam 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
kuRaivu aLaivathu mozi kuRai ozi n^enycamE! 
n^iRai vaLai mun kaiyAL n^ErizaiyavaLoDum 
kaRaivaLar pozilaNi kazumala vaLan^agarp 
piRaivaLar caDaimuDip perun^thakai irun^thathE    3.24.7 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Oh mind! Get rid of the flaw of deliberating on the flaws! 
There is the Magnanimous of crescent growing twined hair, 
along with the Lady well ornate with forehands rich with bangles, 
at the prosperous town of thirukkazumalam embellished 
with dense gardens! 
 
பொருளுரை

 
நெஞ்சமே! குற்றங்களை ஆய்ந்து ஆய்ந்து அயர்கின்ற மொழிகளைக் 
கூறும் குற்றத்தை விடு! நிறைய வளைகளை முன்கைகளில் அணிந்த 
நேர்த்தியான அணிகலன்களை அணிந்த உமையம்மையுடன் 
கருத்தடர்ந்த சோலைகள் அணிசெய்யும் திருக்கழுமலம் என்னும் 
வளமிக்க நகரில், பிறை வளர்கின்ற திருச்சடைமுடியுடைய 
பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்! 
 
Notes

 
1. குறைவு அளைவது மொழி குறை ஒழி! 
ஒ. லோகத டொங்கவ நீவேகே தித்துவிரி? 
   நிம்ம நிம்ம தனுவ சந்தைசி கொள்ளி. 
   நிம்ம நிம்ம மனவ சந்தைசி கொள்ளி. 
   நெரெ மனெய து:கக்கே அளுவவன மெச்சா 
   கூடல சங்கம தேவ! 
      - பசவண்ணர் 
   (உலகத்தாரின் குற்றங்களை நீங்கள் ஏன் திருத்தப் போகின்றீர்கள்? 
   உங்கள் உருவைச் சரி செய்து கொள்ளுங்கள். 
   உங்கள் மனதைச் சரி செய்து கொள்ளுங்கள். 
   பக்கத்து வீட்டுக்காரன் இழிவுக்கு அழுபவனைக் 
   கூடல சங்கம தேவன் மகிழமாட்டான்.) 
2. நம்முடைய குற்றங்களையும் நீங்குகின்ற வகையாக  
பற்றற்றவனாகிய சிவபெருமானின் பற்றினைப் பற்றிப் 
பற்று விடவேண்டுமேயன்றி, வெற்றாராய்ச்சி செய்வது 
பயனற்ற மனவழுத்ததிற்கே வழிவகுக்கும். 
3. அளைதல் - ஒன்றிலேயே உழன்று இருத்தல் (உ.ம். சேறளைதல்); 
நேரிழை - நேர்த்தியான அணியுடையவள்; கறை - (இங்கு) கருத்த; 
பொழில் - சோலை. 

Related Content

Becoming God Itself

Lead Happy Life

Medicine, Mantra & Meritorious

Is there any other refuge ?

Oh God save me