திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருவடகுரங்காடுதுறை
பண் சாதாரி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்மு பா
திரிகளே விரவியெங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை
அடை குரங்காடுதுறை
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார்
இடமென விரும்பினாரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thiruvaDakuraN^gADuthuRai
paN cAthAri
mUnRAm thirumuRai
thirucciRRambalam
kON^gamE kuravamE kozumalarp
punnaiyE kokuDi mullai
vEN^kaiyE nyAzalE vimmu pA
thirikaLE viraviyeN^kum
ON^ku mA kAviri vaDakarai
aDai kuraN^gADuthuRai
vIN^kun^Irc caDaimuDi aDikaLAr
iDamena virumbinArE.
thirucciRRambalam
Meaning of song:
On the northern bank of kAviri that rises
with kOngu, kurA, punnai of big flowers,
kokuDi mullai, vEngai, nyAzal, blooming
pATalam mixed all throughout, the
kurangADuthuRai is the place the flooding
matted-hair Reverend liked as place.
Notes:
1. kONgu ... - various flowers.