திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருச்சேய்ஞலூர்
பண் பழந்தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
காடடைந்த ஏனமொன்றின் காரணமாகி வந்து
வேடடைந்த வேடனாகி விசயனொடு எய்ததென்னே
கோடடைந்த மால் களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்
சேடடைந்த செல்வர் வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thiruccEynyalUr
paN pazan^thakkarAgam
muthal thirumuRai
thirucciRRambalam
kADaDain^tha EnamonRin kAraNamAki van^thu
vEDaDain^tha vEDanAki vicayanoDu eythathennE
kODaDain^tha mAl kaLiRRuk kOcceN^kaNARku aruL cey
cEDaDain^tha celvar vAzuny cEynyalUr mEyavanE.
thirucciRRambalam
Meaning of song:
Having the reason as a pig that got into the forest,
why did You come in the disguise of hunter and
launch (arrow) along side arjuna ? Oh the One,
Who blessed kOccengaTcozan (having many) tuskers,
Who is residing at thiruccEynyalur of beauty and
domicile of affluents.
Notes:
1. Enam - pig; kODu - tusk; kaLiRu - elephant;
cEDu - charm.