திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
தலம் கோயில்
பண் பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உயர் கொடியாடை மிடைபடலத்தின்
ஓம தூமப்படலத்தின்
பியர் நெடுமாடத்து அகிற் புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்து சேர் கனகம்
நிறைந்த சிற்றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்
சேவடிகள் என் மனத்து வைத்தருளே.
திருச்சிற்றம்பலம்
thirumALigaiththEvar thiruvicaippA
thalam kOyil
paN panycamam
onbadhAm thirumuRai
thirucciRRambalam
uyarkoDiyADai miDaipaDalaththin
Oma dhUmap paDalaththin
piyar n^eDu mADaththu akiR pukaip paDalam
perukiya perumpaRRap puliyUr
ciyaroLi maNikaL n^iran^thu cEr kanakam
n^iRaintha ciRRambalak kUththA
mayaraRum amarar makuTan^thOy malarc
cEvaDikaL en manaththu vaiththaruLE.
thirucciRRambalam
Meaning:
In the scene rich of the high raise flags, where the
smoke from the rites cover and in that the smoke of
the (fragrant) aquil from the high rise buildings join
- the Artist of such perumpaRRappuliyUr where the
bright gems with the combination of gold is
abundantly available, bless keeping You Perfect Feet,
that touches the crowns of the immortals (divines)
who have come out of the illusion, in my mind.
Notes: