திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கீழ்வேளூர்
பண் : நட்டராகம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மின்னுலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும்
பன்னுலாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர்
பொன்னுலாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னுலாவிய சிந்தையர் மேல் வினையோடிட வீடாமே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thirukkIzvELUr
paN : naTTarAgam
Second thirumuRai
thirucciRRambalam
minnulAviya caDaiyinar viDaiyinar miLirtharum aravODum
pannulAviya maRaiyoli n^Avinar kaRaiyaNi kaNTaththar
ponnulAviya konRaiyan^ thArinar pukazmiku kIzvELUr
unnulAviya cin^thaiyar mEl vinaiyODiDa vIDAmE.
thirucciRRambalam
Explanation of song:
One with lightning wandering twined hair;
With bull; Having the glittering snake and
the tongue that enrichingly did the sound of vedas;
With throat wearing stain; With the bunch of
konRai that resembles gold - His thirukkIzvELUr
those who keep in mind, the vinai on them will
run away and liberation will happen.
Notes:
1. pannuthal - analyse/enrich; unnuthal - keep in mind.