திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கேதீச்சரம்
பண் : நட்டராகம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மாடெலாம் மண முரசெனக் கடலினது
ஒலிகவர் மாதோட்டத்து
ஆடலேறுடை அண்ணல் கேதீச்சரத்து
அடிகளை அணிகாழி
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல்
நவின்றெழு பாமாலைப்
பாடலாயின பாடுமின் பத்தர்கள்
பரகதி பெறலாமே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandhar aruLiya thevaram
thalam : thirukkEthIccaram
paN : naTTarAgam
Second thirumuRai
thirucciRRambalam
mAdelAm maNa muracenak kaDalinathu
olikavar mAthOTTaththu
ADal ERuDai aNNal kEthIccaraththu
aDikaLai aNikAzi
n^ADuLArkku iRai nyAnacamban^than col
n^avinRezu pAmAlaip
pADalAyina pADumin pathhtarkaL
parakathi peRalamE.
thirucciRRambalam
Translation of song:
On the Reverend of thirukkEthIccaram,
the Prime having dancing bull at the
thirumAthOTTam of enchanting sound
of the sea in all the sides that is like
the wedding drum, the song garland
of the words of thirunyAnacambandhar -
the god of the people of embellished cIrkAzi -
oh, the devotees, sing! The Ultimate state
will be got!
Notes:
1. mAthOTTam is the name of the town and
thirukkEthIccaram is the name of the abode.
2. mADelAm - on all sides.