logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

kavalai-niingka-vazhi

கவலை நீங்க வழி

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருவேடகம் 
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
குண்டலம் திகழ் தரு காதுடைக் குழகனை 
வண்டு அலம்பும் மலர்க் கொன்றை வான் மதியணி 
செண்டு அலம்பும் விடைச் சேடன் ஊர் ஏடகம் 
கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே.        3.32.3 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thiruvEDagam 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
kuNDalam thikaz tharu kAthuDaik kuzakanai 
vaNDu alambum malarkkonRai vAn mathi aNi 
ceNDu alambum viDaic cEDan Ur EDakam  
kaNDu kai thozuthalum kavalai n^Oy kazalumE.        3.23.3 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


The Youth with the glorious ear-ball, 
the Everlasting wearing the moon of the sky and 
beetle humming floral konRai, having the  
floral crown swaying bull - His town thiruvEDagam, 
when seen and hands folded in worship, 
the disease of worries will get disentangled. 
 
பொருளுரை


குண்டலம் காதில் திகழும் இளமையானவனை, 
வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மலரையும் வானத்து 
மதியையும் சூடி, தலையில் ஆடுகின்ற பூச்செண்டை உடைய 
எருதினை உடைய (எல்லாவற்றிற்கும் பிறகும்) 
எப்போதும் இருப்பவனின் ஊரான திருவேடகத்தினைக் 
கண்டு கைகளால் தொழுதவுடன், நம்முடைய கவலை 
என்னும் நோயானது கழன்று அகலும். 
 
Notes


1. செண்டு அலம்பும் விடை   
ஒ. செண்டாடும் விடையாய் - சுந்தரர். 
2. சேடன் - எஞ்சி இருப்பவன் - எல்லா உயிர்களும் 
ஒடுக்கம் பெற்ற பின் ஒருவனாக எஞ்சி இருப்பவன். 
3. குழகன் - இளமையானவன்; அலம்புதல் - ஒலித்தல்/ அசைதல்; 
செண்டு - பூச்செண்டு.

Related Content

வழிபடும் முறை (சாதனஇயல்)

வழிபாட்டின் பயன்

திருக்கோயில் வழிபாட்டு இயல்

Drive Away My Fear

Sure loss of evils