திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : சாதாரி
நான்காம் திருமுறை
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ. 4.9.3
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : common
paN : cAthAri
Fourth thirumuRai
thiruvangamAlai
thirucciRRambalam
cevikAL kENminkaLO - civan emmiRai cempavaLa
eripOl mEnippirAn thiRam eppOthum cevikAL kENminkaLO. 4.9.3
thirucciRRambalam
Meaning of Thevaram
Oh ears listen!
The glory of the Lord shiva, our God,
the Lord of form like the coral fire,
oh ears listen always!
பொருளுரை
காதுகளே கேளுங்கள்!
சிவபெருமான், எமது இறைவன்,
செம்பவளம் தீ போன்ற உருவமுடைய பெருமானின்
புகழினை எப்பொழுதும் காதுகளே கேளுங்கள்!
Notes
1. இத்திருவங்கமாலையை சேக்கிழார் பெருமான்
"செல்கதி காட்டிடப் போற்றுந் திருவங்கமாலை" என்று
போற்றுகின்றார். இறைவன் நமக்கு அளித்த உடல் உள்ளிட்ட
எல்லாப் பொருள்களையும் சிவபெருமானுக்கு உடைமையாகவும்,
உயிரை அப்பெருமானுக்கு அடிமையாகவும் உணர்ந்து
ஆராத பேரின்பம் தரும் அப்பெருமானின் பணியில்
ஈடுபடுத்தலே செல்கதிக்கு வழியாக இப்பதிகம் நம்மை
வழிப்படுத்துகின்றது.
இத்திருப்பதிகம் தலை முதல் கால்கள் வரை முறையாக
ஒவ்வொரு உறுப்பையும் இறைவர் பணியில் பயன்கொள்ளச்
சொல்கிறது.