logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

iyanai-ararumin

ஐயனை அரற்றுமின்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருவேடகம் 
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார் 
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து  
ஐயனை அடிபணிந்து அரற்றுமின்; அடர்தரும் 
வெய்ய வன் பிணி கெட வீடு எளிதாகுமே.        3.32.6 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thiruvEDagam 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
poykaiyin poziluRu puthumalarth thenRal Ar 
vaikaiyin vaDakarai maruviya EDagaththu 
aiyanai aDipaNin^thu araRRumin; aDar tharum 
veyya van piNi keDa vIDu eLithAgumE        3.32.6 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


Saluting the Feet incessantly hail the Lord at  
thiruvEDakam on the northern bank of vaikai 
wandered by the fresh floral breeze from the  
gardens and ponds! 
The crowding fiery cruel misery will ruin and 
liberation will become easier! 
 
பொருளுரை


குளங்களிலும், சோலைகளிலுமிருந்து வரும் புதுமலர் 
வாசங்கமழ் தென்றல் ஆர்கின்ற வைகையாற்றின் 
வடகரையில் உள்ள திருவேடகத்துத் தலைவனைத் 
திருவடி வணங்கிப் பலபல சொல்லிப் புகழ்மின்! 
அடர்த்து வருவதும் வெம்மையானதும் கொடியதுமான 
பிணி ஒழிய முத்திப் பேறு எளிதாகக் கிடைக்கும்! 
 
Notes

Related Content

Reputation of Thiruvedakam

கவலை நீங்க வழி

அலியும் ஆயவன்