logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

iyalpaaka-perra-chelvam

இயல்பாகப் பெற்ற செல்வம்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருப்பிரமபுரம் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான்  விடையேறி 
பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பலவுடையான் 
விண்ணுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரந் தொழ விரும்பி 
எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruppiramapuram 
paN    :    cI kAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
kaNNuthalAn veNNIRRAn kamazcaDaiyAn viDaiyERi 
peNNithamAm uruvaththAn pinynyakan pEr palavuDaiyAn 
viNNuthalAth thOnRiya cIrp piramapuran^ thoza virumbi 
eNNuthalAm celvaththai iyalbAga aRin^thOmE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
Fore-head eyed; With white ash; With fragrant twined hair; 
Bull Rider; Of the soothing Form with Lady; One with the  
feather (of crane); One with very many names; 
As the ornament on forehead for the universe the  
thiruppiramapuram that appeared, the thoughts of 
ardently worshipping it - this wealth we naturally got! 
 
பொருளுரை

  
நெற்றியில் கண்ணுடையவன்; வெண்ணீறு பூசியவன்;  
கமழ்கின்ற சடையுடையவன்; காளை ஊர்தியன்; 
இனிமையாகப் பெண்ணைக் கொண்ட உருவத்தன்; 
கொக்கிறகு அணிந்தவன்; பல திருநாமங்கள் உடையவன்; 
(அவனுடைய) விண்ணிற்குத் திலகமாகத் தோன்றிய  
திருப்பிரமபுரத்தைத் தொழவிரும்பி எண்ணுவதாகிய 
செல்வத்தை நாம் இயற்கையாகவே பெற்றோம்! 
 
Notes

  
1. இயல்பாக அறிந்தோமே - சிவனடியே சிந்திக்கும்  
திருப்பெருகு சிவஞானத்தோடு தோன்றியவர் ஞானசம்பந்தர். 
எனவே இயல்பாகவே அவருக்கு இறைவனுடைய திருவடி 
தொழுதல் அவருக்கு அமைந்தது. 
ஒ. பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே 
   நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும் 
   சீலமாய சிந்தையில் தேர்வதில்லை; தேவரே! - சம்பந்தர். 
2. பிஞ்ஞகம் - இறகு. சிவபெருமான் குரண்டாசுரன் என்ற 
கொக்கு வடிவான அசுரனை ஒடுக்கி இறகினை அணிந்தமை. 
3. எண்ணுதலாம் செல்வம் - சிவபெருமான் திருவடி சிந்தித்தலே 
செல்வம். 
ஒ. தில்லைச் சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும்  
      செல்வம் செல்வமே - சம்பந்தர் 
   தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும்  
   தொலையாச் செல்வச் சோற்றுத்துறையே - சுந்தரர். 

Related Content

The Best Wealth

My duty is just to keep serving

In pursuit of wealth ...

Pictures of Kongunattu Padalpetra Thalangal

Who is realy rich ?