திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவாவடுதுறை
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. 3.4.8
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvAvaDuthuRai
paN : gAndhAra panycamam
Third thirumuRai
thirucciRRambalam
pEriDar perukiyOr piNi varinum
cIruDaik kazalalAl cin^thai ceyyEn
EruDai maNimuDi irAvaNanai
AriDar paDa varai aDarththavanE.
ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl
athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE. 3.4.8
thirucciRRambalam
Meaning of Thevaram
Even if the tough hurdles increase and sickness comes
I will not think of anything but the Perfect Feet!
Oh the One Who crushed the rAvaNa of nice embellished crown
under the mount putting into misery.
If this is the way to govern us and nothing to give us,
that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai!
பொருளுரை
பெரிய இடர்ப்பாடுகள் மலிந்து நோயுற்றாலும்,
செம்மையான கழலணிந்த திருவடிகளை அல்லாது வேறு நினைக்கமாட்டேன்!
அழகிய மணிமுடியுடைய இராவணனை
மிகுந்த துன்பமுறும் வண்ணம் மலைக்கீழ் நெரித்தவனே!
இவ்வகையே எம்மை ஆளும் வகையாக,
எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால்,
அதனையே உனது திருவருளாகக் கொள்வோம்
திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே!
Notes
1. ஏர் - செம்மையான; வரை - மலை; அடர்த்தல் - நெரித்தல்.