கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
தலம் திருப்பூவணம்
பண் பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
திருவருள் புரிந்து ஆள் கொண்டு இங்ஙன்
சிறியனுக்கு இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்து ஆனந்தமே தரும் நின்
பெருமையிற் பெருமை ஒன்றுளதே!
மருது அரசு இருங்கோங்கு அகில் மரம் சாடி
வரை வளம் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங்கு ஆவண வீதிப்
பூவணம் கோயில் கொண்டாயே.
திருச்சிற்றம்பலம்
karuvUrththEvar aruLiya thiruvicaippA
thalam pUvaNam
paN panycamam
onbadhAm thirumuRai
thirucciRRambalam
thiruvaruL purin^thu AL koNDu iN^N^an
ciRiyEnukku iniyathu kATTip
peritharuL purin^thu Anan^thamE tharum n^in
perumaiyiR perumai onRuLathE!
maruthu aracu iruN^kON^ku akil maram cADi
varai vaLam kavarn^thizi vaiyaip
poruthirai maruN^gON^gu AvaNa vIdhip
pUvaNam kOyil koNDAyE.
thirucciRRambalam
Translation of song:
Doing grace, taking into fold, showing here
for the mean (myself) the nice thing,
giving great grace, giving only joy -
other than Your (thus) glory is there any better glory?!
Oh the One Who has taken abode at thiruppUvaNam
where the market streets are next to the tidal banks
of vaigai that comes down falling marudhu, aracu,
strong kOngu, agil trees, stealing the wealth of the mountain!
Notes:
1. thirai - tide; maruN^gu - side; AvaNam - market street.