logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

iraivan-thantipaara

இறைவன் தண்டிப்பாரா?

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருவதிகை 
பண்     : கொல்லி 
நான்காம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
போர்த்தாயங்கோர் ஆனையின் ஈருரிதோல் 
    புறங்காடரங்கா நடமாட வல்லாய் 
ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ் 
    அடர்த்திட்டு அருள் செய்த    அது கருதாய் 
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் 
    என் வேதனையான விலக்கியிடாய் 
ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடில  
    வீரட்டானத்துறை அம்மானே.        4.1.10 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thiruvAlavAy 
paN    :    kolli 
Fourth thirumuRai 
 
thirucciRRambalam 
 
pOrththAy aN^gu Or Anaiyin Iruri thOl 
    puRaN^kADu araN^gA n^aDamADa vallAy 
ArththAn arakkan thanai mAlvaraikkIz 
    aDarththiTTu aruL ceytha athu karuthAy 
vErththum puraNDum vizun^thum ezun^thAl 
    en vEthainaiyAna vilakkiyiDAy 
ArththAr punalAr adhikaik keDila  
    vIraTTAnaththu uRai ammAnE.        4.1.10 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Cloaked with the peeled skin of an elephant, 
oh the One Who is capable of dancing cemetery as dais! 
Think of the Grace You did, after crushing the 
arrogant demon under the glorious mount! 
Sweating, rolling, falling and getting up 
- remove my gloom! 
Oh the Mother at the thiruvadhikaik keDila 
vIraTTam surrounded by roaring water! 
 
பொருளுரை


ஒரு யானையின் தோலை உரித்துப் போர்த்தாய்! 
சுடுகாடே அரங்கமாக நடமாட வல்லாய்! 
ஆரவாரத்துடன் வந்த அரக்கனை (இராவணனை) பெருமை  
மிகு மலையின் கீழ் அடர்த்துப் பின் அருளும் செய்த  
அதனை நினைவில் கொள்! 
வேர்த்தும், புரண்டும் விழுந்தும், எழுகின்ற என்னுடைய 
வேதனையை விலக்கு! 
ஒலிக்கின்ற நீரோட்டம் சூழ்ந்த கெடிலத் திருவதிகை 
வீரட்டானத்தில் உறைகின்ற தாயானவனே! 
 
Notes


1. அது கருதாய் 
இறைவனின் நோக்கம் உயிர்களைத் தண்டிப்பது இல்லை; 
திருத்துவது மட்டுமே. எனவே ஆணவத்தோடு திருக்கயிலாய 
மாமலையை எடுத்த அரக்கனை அலற அம்மலைக்கீழ் 
அழுத்தினரேனும், அவன் தன் தவறை உணர்ந்து வேண்டியபோது, 
இறைவன் வாளொடு நாளும் கொடுத்துத் திருவருள் செய்தார். 
திருநாவுக்கரசர் பெருமான், "யானும் தருக்கிச் சமணத்திலே 
உன்னை மதியாது திரிந்தாலும், இப்பொழுது உன்னையே  
சரணமாக அடைந்தேன். இராவணனுக்கு அருளியது போன்று  
எனக்கும் அருள் செய்!" என்று ஒவ்வொரு பதிகத்தின் பத்தாவது 
பாடலிலும் திருக்கடைக்காப்பு செய்கிறார். 
(இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன்  
மெய்த்தன்மை அறிந்து துதிப்பதுவே - அரசர் புராணம். 
மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் 
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் - பிள்ளையார் புராணம்.) 
2. புறங்காடு - சுடுகாடு. 

Related Content

The Glory of Arudra Dharisanam

Lead Happy Life

Medicine, Mantra & Meritorious

Is there any other refuge ?

Oh head, bow down !