logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

iraivan-pirapaaraa-marippaaraa

இறைவன் பிறப்பாரா? மரிப்பாரா?

 

திருநாவுக்கரசர் தேவாரம்


தலம்    :    பொது
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய் மனப்பாறைகட்கு ஏறுமோ
அத்தன் என்று அரியொடு பிரமனும்
துத்தியஞ் செய நின்ற நற் சோதியே.        5.100.2

திருச்சிற்றம்பலம்

thirunAvukkaracar thEvAram


thalam    :    pothu
thirukkuRunthokai
Fifth thirumuRai

Athi purANath thirukkuRunthogai

thirucciRRambalam

ceththuc ceththup piRappathE dhEvenRu
baththi cey manappARaikaTku ERumO
aththan enRu ariyoDu biramanum
thuththiyany ceya n^inRa n^aR cOthiyE.    5.100.2

thirucciRRambalam

Meaning of Thevaram


How would the Meritorious Light that stood to be
praised by hari and brahma as the "Ultimate",
be understood by the stone like minds that do
devotion thinking, "It is God Who takes birth and dies!"

பொருளுரை


"இறைவன் பிறந்தார், செத்தார்" என்று நம்பிப்
பத்தி செய்கின்ற கல் போன்ற மனமுடையவர்களுக்கு
(அறிவிலிகளுக்கு)  எவ்வாறு "மேலானவன்" என்று
அரியும் பிரமனும் துதிக்க நின்ற சோதியை உணர இயலும்?

Notes


1. உலகில் பிறந்து நன்னெறி காட்டுகின்ற பெரியோர்களும்
வாழ்ந்து காட்டிய சான்றோர்களும் குருமார்களாகப் 
போற்றத் தக்கவர்கள். 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
என்று அவர்கள் சுவர்க்கம் முதலான முத்திப்பேறு ஈறான
நிலைகளில் திகழ்வர் என்பது ஆன்றோர் தெளிவு.
    ஆனால் இவர்கள் அனைவரும் இறைவனாகிய
இணையில்லாத ஒருவனுடைய திருவருளால் மட்டுமே
மேல் உயர்ந்தது ஒன்றில்லாத முத்திப்பேறு உள்ளிட்ட
பேறுகளைப் பெறுகின்றனர் என்பதையும், அப்பெருமான்
திருவருள் அல்லாது அசையவும் இயலாதவர்கள் என்பதையும்
தெளிவாக உணரவேண்டும். அவ்வறிவு இல்லாவிடில் அப்பெரியோரைக்
குருவாக உணராமல் சிறுதெய்வ வழிபாடாக உருச்சிதைக்கின்ற
பரிதாபம் நேரிடும். முத்திப்பேறு உள்ளிட்ட எல்லா இன்பங்களையும்
அருளுகின்ற இறைவனோடு, முத்திப்பேரின்பம் தவிரப் பிற
பேறுகளை அப்பெருமான் திருவருளால் பெற்று வழங்கும்
உயர் நிலை அடைந்த ஆன்மாக்களை ஒன்றாகக் கருதும்
பிழை நிகழ ஏதுவாகும். 
    இறைவனை மேலான இறைவனாக வழிபட்டு, 
உயர் நிலை அடைந்த ஆன்மாக்களை அவர் தவத்தின்
ஈட்டம் கருதிப் போற்றுவதே முறையாகும்.
ஒ. மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை - சுந்தரர்
ஜனன ம்ருத்யுதானாம் சேவயா தேவதானாம்
ந பவதி ஸ¤கலேசஸ் ஸம்சயோ நாஸ்தி தத்ர |
அஜனிம் அம்ருத ரூபம் ஸாம்பமீசம் பஜந்தே
ய இஹ பரம ஸௌக்யம் தே ஹி தன்யா லபந்தே ||
(பிறப்பு இறப்புகளுடைய தேவர்களின் சேவையால்
சிறிது சுகமும் இல்லை. இதில் ஏதும் சந்தேகமில்லை.
எவர்கள் பிறப்பு இறப்பு இல்லாதவராயும், உமையோடு
கூடியவராயும் விளங்குகின்ற சிவபெருமானைப் போற்றுகின்றார்களோ
அவர்கள் இங்கேயே மேலான இன்பத்தையும், பிறப்பின்
பயனையும் பெறுகிறார்கள்.)
     - சங்கர பகவத்பாதர் (சிவானந்த லஹரி)   
2. அத்தன் - மேலானவன்; துத்தியம் - போற்றுதல்.

Related Content

The Thief Who Barged In

இறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார்

May the Supremacy of Lord Shiva Stay High! - Prayer from San

Dances of Lord Shiva - Kodukotti, Pandarangam, Kapalam - Pra

இறைவன் புகழை விரும்பிப் பாடுங்கள்