திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருக்கழுமலம்
பண் : கொல்லி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்; நீடியாழ் பாடவே
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வளநகர்ப்
பெருக்கு நீரவளொடும் பெருந்தகை இருந்ததே. 3.24.8
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirukkazumalam
paN : kolli
Third thirumuRai
thirucciRRambalam
arakkanAr aruvarai eDuththavan alaRiDa
n^erukkinAr viralinAl; n^IDiyAz pADavE
karukku vAL aruL ceythAn; kazumala vaLan^agarp
perukku n^IravaLoDum perun^thakai irun^thathE. 3.24.8
thirucciRRambalam
Meaning of Thevaram
As the demon lifted the exceptional mount,
crushed with a finger making him cry out!
When (he) sang the yAz at length,
blessed him with sharp sword;
That Magnanimous along with the Lady of
grand characters is at the prosperous town
of thirukkazumalam.
பொருளுரை
அரக்கன் (இராவணன்) அரியதாகிய (திருக்கையிலை) மலையை
எடுக்க, அவன் அலறும் வண்ணம் திருவிரலால் நெருக்கினார்;
(பின் அவன்) யாழினைக் கொண்டு நெடிது பாடக்
கூர் வாள் அருள் செய்தார்; அப்பெருந்தகையாகிய
சிவபெருமான் பெருங்குணங்கள் கொண்ட உமையம்மையாருடன்
திருக்கழுமலமாகிய வளமிக்க நகரில் இருக்கின்றார்.
Notes
1. கருக்கு - கூர்மை; நீர்மை - குணம்.