திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppuLLirukkuvELUr
paN : cIkAmaram
Second thirumuRai
thirucciRRambalam
thiRaN^koNDa aDiyAr mEl thIvinai n^Oy vArAmE
aRaN^koNDu civadhanmam uraiththa pirAn amarumiDam
maRaN^koNDaN^gu irAvaNam than vali karudhi van^dhAnaip
puRaN^kaNDa caTAyenbAn puLLirukku vELUrE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The place where the Lord, Who elucidated the shivadharma
with virtue as the basis freeing the capable devotees from
the disease of bad karma, sits is thiruppuLLirukkuvELUr
of jaTAyu who defeated the rAvaNa who came aggressive
counting his power!
பொருளுரை
(இறைவன் பால்) அடிமைத்திறம் மிக்க அடியவர்கள் மேல் தீவினையாகிய
நோய் வராத வண்ணம், அறத்தை அடிப்படையாகக் கொண்ட
சிவதருமத்தை உரைத்த பிரான் அமரும் இடமாவது,
போர்வெறி கொண்டு தன்னுடைய வலிமையையே நினைந்து (அறம் கருதாது)
வந்த இராவணனை வென்ற சடாயுவின் இடமான
திருப்புள்ளிருக்கு வேளூராகும்.
Notes
1. இராவணன் சீதையை இலங்கைக்கு எடுத்துச் சென்ற போது,
அவ்வடாத செயலை சடாயு வானிலே புட்பக விமானத்தைத்
தடுத்து நிறுத்தினார். அப்பொழுது போர்புரிந்த இராவணன்
சடாயுவின் வீரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கலங்கினான்.
சிவபெருமானால் முன்பு கொடுக்கப்பட்ட வாளால் சடாயுவை
வீழ்த்தி இலங்கை சென்றான். அவ்வாள் ஒருமுறையே பயன்படுத்த
வரம் பெற்றமையால் இராமரோடு நடந்த போரில் பயன்படா
வண்ணம் இங்கு இழந்தனன்.