திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவாவடுதுறை
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அலைபுனல் ஆவடு துறை அமர்ந்த
இலை நுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலை வல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே. 3.4.11
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvAvaDuthuRai
paN : gAndhAra panycamam
Third thirumuRai
thirucciRRambalam
alaipunal AvaDuthuRai amarn^tha
ilai n^unai vERpaDai em iRaiyai
n^ala miku nyAnacamban^than conna
vilaiyuDai arun^thamiz mAlai vallAr
vinaiyAyina n^IN^gippOy viNNavar viyanulakam
n^ilaiyAka mun ERuvar n^ilamicai n^ilaiyilarE. 3.4.11
thirucciRRambalam
Meaning of Thevaram
On our God residing at the tidal thiruvAvaDuthuRai
holding sharp edged spear arm,
these valuable rare thamiz garland told by
the highly virtuous thirunyAnacamban^than those who are adept in,
will get rid of the karmas and get on to the grand world
of the Celestial for sure and are impermanent on the earth.
பொருளுரை
நீர்த்திரை கொண்ட திருவாவடுதுறை அமர்ந்த
கூரிய சூலப்படை உடைய எம் இறைவனை,
நலம் மிகுந்த திரும்ஞான சம்பந்தன் சொன்ன
பயன்தரும் இவ்வரிய தமிழ் மாலையைத் தேர்ந்தவர்கள்,
வினைகள் நீங்கப்பெற்று, விண்ணவருடைய பேருலகம்
ஐயமின்றிச் செல்வர்; இம்மண்ணில் (பிறத்தலிறத்தலாகிய) நிலை நீங்குவர்.
Notes
1. இலை நுனை - கூரிய; வேற்படல் - சூலம்; வியன் - பெரிய.