சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அரசருளிச் செய்கின்றார், "பிள்ளாய்! அந்த அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதியில்லை,
உரை செய்வதுளது; உறு கோள் தானுந் தீய; எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது" என்னப்
"பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுதணையாது" எனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய் மலர்த்தாள் போற்றிப் புகலி வேந்தர், "வேயுறு தோளி" யை எடுத்து விளம்பினாரே.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr aruLiya thiruththoNDar purANam
thirunyAnacambandha cuvAmikaL purANam
panniraNDAm thirumuRai
thirucciRRambalam
aracaruLic ceykinRAr, "piLLAy! an^tha amaNkaiyar vanycanaikkOr avathiyillai,
urai ceyvathu uLathu; uRu kOL thAnum thIya; ezun^tharuLa uDanpaDuvathu oNNAthu" ennap
"paracuvathu n^am perumAn kazalkaL enRAl pazuthaNaiyAthu" enap pakarn^thu paramar ceyya
virai cey malarththAL pORRip pukali vEn^thar, "vEyuRu thOLi" yai eDuththu viLambinArE.
thirucciRRambalam
Meaning of stanza:
aracar told, "Oh son! There is no end to the
malicious practices of those mean camaNar.
There is something to advise; The plants are also
in bad omen; (So) It is not acceptable for you to leave."
the king of pukali said, "If the Thing worshipped is the
ornated feet of our Lord, no harm can approach!"
and hailing the perfect flower adorned floral feet of
the Supreme he told, "vEyuRu thOLi" (padhikam).
Notes:
1. The kOL aRu thiruppadhikam vEyuRu thOLipangan is available
at Prayers for specific ailments
2. avathi - end; oNNAthu - not acceptable; paracuvathu - hailed.